NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிரடி முடிவு

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வெளிநாட்டு தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பான இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் போது பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக தூதரகங்களுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. .

சட்டரீதியாக வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக மட்டுமே அந்த தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ள போதும் ஆனால் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு சென்ற பெண்களுக்கு தேவையான அனைத்து நலன்புரி வசதிகளையும் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டுள்ளது.

பணியகத்தில் பதிவு செய்யாமல் வௌிநாடு செல்லும் பெண்கள் பாதுகாப்பு இல்லத்திற்கு வரும்போது பல்வேறு மோதல் சூழ்நிலைகளை உருவாக்கும் நிலையில், மோதல்களை கட்டுப்படுத்த பொலிஸாரை கொண்டு செல்ல வேண்டிய சம்பவங்கள், கடந்த காலங்களில் ஊடகங்கள் மூலம் வௌியாகி இருந்தன.

அந்த நிலைமைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் பல்வேறு சட்டவிரோதமான வழிகளில் வௌிநாடு சென்று, வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் பணியகம் தீர்மானித்துள்ளது.

விசேடமாக சட்டரீதியாக பெண்கள் வௌிநாடு செல்வதை ஊக்குவிப்பதற்கும், பல்வேறு தரகர்கள் மற்றும் சட்டத்துக்கு புறம்பான வௌிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் ஊடாக வௌிநாடு செல்வதை தடுப்பதற்கும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக பணியகம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles