NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவது தற்காலிகமாக இடைநிறுத்தம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்இ இலத்திரனியல் கடவுச்சீட்டு ஒன்றை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள் செலவாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் வருடாந்தம் குறைந்தது 750,000 கடவுச்சீட்டுகள் வழங்குவதற்கு 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் எனவும் அமைச்சு கூறுகின்றது.

அத்துடன்இ கடவுச்சீட்டு தயாரிக்கும் இயந்திரங்களுக்கு வருடத்திற்கு 1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை தொடங்கும் வரை தற்போதுள்ள கடவுச்சீட்டு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை தற்போதுள்ள N வகை உரிமங்களின் இருப்பு நவம்பர் மாதம் வரை மாத்திரமே போதுமானதாக உள்ளதென தெரியவந்துள்ளது.

எனவேஇ 5 இலட்சம் N வகை அனுமதிப் பத்திரங்களை உடனடியாக பெற்றுக்கொள்வதற்கு குடிவரவுத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தற்போது மாதத்திற்கு 85 ஆயிரம் ‘N’ வகை அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அதிபர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் இலத்திரனியல் கடவுச்சீட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles