(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாடசாலை பதின்ம வயது மாணவர்கள் வன்முறையாக நடந்து கொள்வதற்கு சமூக வலைதளங்களே காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பிள்ளைகளிடையே மனச்சோர்வுக்கான அறிகுறிகள் பொதுவாக காணப்படுவதாக, சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல ஆலோசகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
சிறுவர்கள் சமூக வலைத்தளங்களை அதிகளவில் பயன்படுத்துவதன் ஊடாக அவர்களின் ஆளுமை வளர்ச்சியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, சிறுவர் மற்றும் இளம்பருவ மனநல ஆலோசகர் கலாநிதி தர்ஷனி ஹெட்டியாராச்சி நேற்று (24) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.