புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், அடுத்ததாக வரவிருக்கும் அரச பொது நிகழ்வில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அத்துடன், கடந்த மார்ச் மாதம் புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்ட பின்னர், கென்சிங்டன் அரண்மனை இளவரசி கேட்டின் முதல் புதைப்படத்தையும் இன்று வெளியிட்டுள்ளது.
கிறிஸ்மஸ் தினத்திற்குப் பிறகு அவரது முதல் பொதுத் தோற்றத்தைக் குறிக்கும் வகையில், பிரித்தானிய மன்னரின் பிறந்தநாளின் வருடாந்திர கோடைக் கொண்டாட்டமான Trooping the Colourஇல் நாளை இளவரசி கலந்துகொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
“இளவரசி நாளைய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடிந்ததில் அவரது மாட்சிமை மகிழ்ச்சியடைகிறது.
மேலும் நாளின் அனைத்து கூறுகளையும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்” என்று பக்கிங்ஹாம் அரண்மனையின் செய்தித் தொடர்பாளர் மூன்றாம் சார்லஸ் மன்னர் சார்பாக அறிவித்துள்ளார்.
புதிய புகைப்படத்தில் ஒரு மரத்தின் அடியில் இரு கைகளையும் கட்டியவாறு இளவரசி கேட் நிற்பதாக பிரித்தானிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.