(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
வருடாந்தம் 1,400 இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் விபத்துக்குள்ளாவதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
குறித்த பஸ்கள் சாரதிகளினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைப்பதற்காக புதிய வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இதன் மூலம் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு செலவுகள் மற்றும் பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்து சபைக்கு ஏற்படும் இழப்புகள் குறையும் என்று இலங்கை போக்குவரத்து சபை சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த பஸ்களை பழுதுபார்த்து மீள போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்காக வருடம் ஒன்றுக்கு 465 மில்லியன் ரூபா செலவிடப்படுவதாக சபை குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வரக்காபொல பஸ் விபத்து மற்றும் கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பேருந்து ஆகியன இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமானவை.
மேலும், குறித்த வரக்காபொலை விபத்தில் ஒருவர் உயிரிழந்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.