NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈஸ்டர் குண்டு தாக்குதல் தொடர்பான விவாதம் 21,22இல்..

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் மற்றும் தேசிய பாதுகாப்பு ஒத்திவைப்பு மீதான விவாதத்தை வியாழன் (21) மற்றும் வெள்ளிக்கிழமை (22) நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது.

பாராளுமன்றம் இன்று (19) முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கூடவுள்ளது.

ஆட்கள் பதிவு சட்டத்தின் கீழான உத்தரவுகள் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2334/47 இல் வெளியிடப்பட்ட உத்தரவுகள் நாளை (19) விவாதிக்கப்பட உள்ளன.

அதனையடுத்து சபை ஒத்திவைக்கப்படும் வேளையில் மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை கேள்விகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் வர்த்தமானி எண் 2346/02 இல் வெளியிடப்பட்டுள்ள உத்தரவுகள் நாளை (20) விவாதத்திற்கு உட்படுத்தப்பட உள்ளன.

அதன் பின்னர் ஆளுங்கட்சியால் கொண்டுவரப்பட்ட ஒத்திவைப்புப் பிரேரணை மாலை 5.00 மணி முதல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

Share:

Related Articles