உக்ரைன் தலைநகர் கீவ் நகரைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 50இக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கீவ் நகரை குறிவைத்து இன்று(13) அதிகாலை 3 மணியளவில், ரஷ்யா ஏவிய 10 ஏவுகணைகளை உக்ரைன் விமானப் பாதுகாப்புப் படை வெற்றிகரமாக தடுத்து நிறுத்தியும், ஏவுகணைகளின் உடைந்த பாகங்கள் கீழே விழுந்து நொறுங்கியதில் பொதுமக்கள் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்த 2 குழந்தைகள் உட்பட 20இக்கும் மேற்பட்டோர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில், ஏராளமான வாகனங்கள் தீக்கிரையாகியதுடன் பல கட்டிடங்கள் சேதமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உக்ரைனின் ஒடேசா பகுதியில் ரஷியாவால் ஏவப்பட்ட 10 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி, அங்கு ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை மேற்கொண்ட நிலையில், இந்த தாக்குதல்கள் அரங்கேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.