(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் உணவக மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்தின் உத்தரவை மதிப்பதில்லை என நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
நேற்று முன்தினம் (20) நள்ளிரவு முதல் இலங்கையில் ஒரு இறாத்தல் பாணின் விலை 10 ரூபாவினாலும் ஏனைய பேக்கரி உற்பத்திகளின் விலையும் குறிப்பிடத்தக்க அளவிலும் அரசாங்கத்தினால் குறைக்கப்பட்டு, அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இலங்கையின் எந்தவொரு பிரதேசத்திலும் அரசாங்கத்தின் அறிவிப்பை பேக்கரி உரிமையாளர்கள் மதிக்கவில்லை என்று நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
அரசாங்கத்தின் அறிவித்தல்கள் வெறுமனே அறிவிப்புகளாக மாத்திரம் நின்றுவிடுவதன் காரணமாக நுகர்வோர் பெரும் இக்கட்டான நிலையை எதிர்கொண்டுள்ளதாகவும் குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.