(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள பிரதான உணவகம் ஒன்றில் புழுக்கள் அடங்கிய உணவுகளை வழங்கிய சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் முறைப்பாடு கிடைத்துள்ளது.
சட்டத்தரணி ஒருவர் உணவகத்தில் இருந்து உணவை எடுத்துச் சென்று வீட்டில் சாப்பிடத் தயாரான போது அதில் புழுக்கள் இருந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், உணவகம் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெள்ளவத்தை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.