NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உணவுப் பொதியில் காத்திருந்த பேரதிர்ச்சி… !

திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் உணவுப் பொதியில் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட உணவுப் பொதியை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள் இருந்தமையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்ப்பு  பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.குறித்த பிரபல உயர்தர சைவஹோட்டலிற்கு விரைந்த பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை திருகோணமலை நகரில் குறித்த சைவ ஹோட்டல் மிக பிரபலம் என கூறப்படும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் உணவுகளை சமைப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles