NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உணவு ஒவ்வாமை காரணமாக 25 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

அநுராதபுரம், கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக இன்று (12) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் 3 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் காலை உணவுக்காக நெத்தலி கருவாடு, வெண்டைக்காய் மற்றும் முருங்கைக் கீரை உள்ளிட்ட உணவு வகைகளை உட்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அவ்வுணவை உட்கொண்ட சிறிது நேரத்தில் அவர்களுக்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதனையடுத்து அனைத்து மாணவர்களையும் கஹட்டகஸ்திகிலிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் அனைவரும் சுகயீனமடைந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles