(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பாணந்துறையில் உள்ள பாடசாலையொன்றில் தேநீர் அருந்திய ஆசிரியர்கள் ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
பாடசாலை இடைவேளையின் போது, தேநீர் அருந்திய நிலையில், உடலில் வாந்தி, தலைச்சுற்று போன்ற ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டுள்ள நிலையில், இவர்கள் வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6 ஆசிரியர்களும் பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.