NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உணவு ஒவ்வாமை காரணமாக 9 சிறுமிகள் வைத்தியசாலையில் அனுமதி..!

சிறுவர் காப்பகம் ஒன்றிலிருந்த 9 சிறுமிகள் உணவு ஒவ்வாமை காரணமாகச் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமிகள் இன்று (21) காலை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் கண்டி, தலாத்து து ஓயாவில் அமைந்துள்ள சிறுவர் காப்பகம் ஒன்றில் உள்ள 15 – 17 வயதுடைய சிறுமிகள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் நேற்று புதன்கிழமை (20) இரவு உணவுடன் மரவள்ளிக்கிழங்கு உட்கொண்டுள்ள நிலையில் திடீரென சுகயீனமுற்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தலத்து ஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles