(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பில் இடம்பெற்ற லங்கா பிரீமியர் லீக் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது தேசிய கீதத்தை திரிபுப்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதற்கமைய நேற்று (07) விசாரணை பிரிவுக்கு வருகைதந்து அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த நிகழ்வில் தேசிய கீதத்தை பாடும் போது ‘மஹதா’ என்ற வார்த்தையை தான் பயன்படுத்தவில்லை என உமாரா குறிப்பிட்டுள்ளார்.
தான் உச்சஸ்தாயில் பாடியமையால், ‘மாதா’ என்ற வார்த்தை ‘மஹதா’ என்று கேட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், தேசிய கீதம் மத்தியஸ்தாயில் பாடப்பட வேண்டும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பிரதி இசைப் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.