இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் அவர்கள் விரும்பும் தொழில் பாடத்தை இலவசமாகக் கற்பதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் அதில் தோற்றிய மாணவர்களுக்கும் அதே வகையான பயிற்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.