NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிரிழக்கும் அபாயத்தில் குறைமாதக் குழந்தைகள் : காசா தெரிவிப்பு !

காஸாவில் இனி மின்சாரம் இல்லாமல் போனால், குறைமாதக் குழந்தைகள் உயிரிழக்க நேரிடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

இது தொடர்பில் அல் ஷிfபா மருத்துவமனை வைத்தியர் நாசர் புல்புல் தெரிவிக்கையில்;

“.. இந்த நெருக்கடியான நிலைக்குத் தேவையான மருத்துவ உதவிகளை அனுப்பி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். இல்லையெனில் நாங்கள் மிகப்பெரிய அழிவை சந்திக்க வேண்டியிருக்கும். இங்கே 55 குழந்தைகள் உள்ளனர். ஒருவேளை மின்சாரம் இல்லாமல் போனால் மின்சார உதவி தேவைப்படும். குழந்தைகளை அடுத்த 5 நிமிடங்களில் இழந்து விடுவோம்…”

மருத்துவமனைகளில் எரிபொருள் மிகவும் குறைவாக, அபாய கட்டத்தில் இருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது. இந்த மருத்துவமனையில் மட்டும் சுமார் 60,000 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

Share:

Related Articles