இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 4 வருடங்கள் ஆகின்றன.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று நாடளாவிய ரீதியில், கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் நான்காவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது.
தாக்குதல்கள் தொடர்பான உண்மை மற்றும் நீதிக்கான திருச்சபையின் தேடலை ஆதரித்து, இன்று மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்குமாறு கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார்.