உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த விடயம் தொடர்பில் அரசியல் தலையீடு இன்றி சுயாதீன விசாரணை நடத்தினால் போதுமானது எனவும் கர்தினால் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிந்து, தவறு செய்தவர்களை காப்பாற்ற முயற்சிக்காது விசாரணை முன்னெடுக்கப்படுமானால் போதுமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் உண்மைகளை கண்டறிய உரிய பொறிமுறைகள் ஊடாக வெளிப்படையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் சர்வதேசத்தினை நாட வேண்டிய அவசியமில்லை என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.