NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உயிர் காக்கும் பொருட்கள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் : அன்டோனியோ குட்டரெஸ் 

இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இஸ்ரேல் இராணுவம் பதிலடி நடவடிக்கையாக போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் இன்று 7-வது நாளாக நீடிக்கிறது.

ஹமாஸ் படையினரை முழுமையாக ஒழிப்பதற்காக அவர்கள் வாழும் காஸா பகுதிக்கு செல்லும் மின்சாரம், குடிநீர், உணவு உள்பட அனைத்து சேவைகளையும் இஸ்ரேல் தடுத்து நிறுத்தி உள்ளது. இந்த நிலையில் போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசுவதால் காஸா மக்கள் நிலை குலைந்து போய் உள்ளனர்.

உணவு, மருந்துக்கு திண்டாடும் நிலையில் உடமைகளை இழந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறிடத் தொடங்கி உள்ளனர். இன்று காலை நிலவரப்படி சுமார் 4 லட்சம் பேர் காஸாவில் இருந்து வெளியேறி இருப்பது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இஸ்ரேலின் பதில் தாக்குதலால் காஸா நகரம் இருளில் மூழ்கியுள்ளது. இஸ்ரேல் காஸாவை முழுமையாக முற்றுகையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 23 லட்சம் பேர் வசிக்கும் காசாவில் உணவு, எரிபொருளை முழுமையாக இஸ்ரேல் நிறுத்தியது. ஒரே ஒரு மின் நிலையம் இருந்த நிலையில் அங்கும் எரிபொருள் இல்லாததால் முடக்கியுள்ளது.

இதையடுத்து, “உணவு, எரிபொருள் மற்றும் தண்ணீர் போன்ற உயிர் காக்கும் பொருட்கள் காஸாவிற்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து, “இதுவரை வான்வழி தாக்குதல் நடத்தி வந்த நிலையில் இனி தரைவழி தாக்குதலும் நடத்தப்படக்கூடும்” என்றும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles