NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உருளைக் கிழங்குக்கான வரியை நீடிக்க தீர்மானம்!

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குக்கு விதிக்கப்பட்டுள்ள விற்பனை பொருட்களுக்கான விசேட வரியை மேலும் 04 மாத காலத்துக்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

எனவே, செப்டெம்பா் மாதம் 08 ஆம் திகதி முதல் எதிர்வரும் நான்கு மாத காலப்பகுதிக்கு இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குக்கான, விற்பனை பொருட்களுக்கான விசேட வரி அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழங்குக்கு, இந்த வருடம் மார்ச் மாதம் 08 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்வகையில் ஒரு கிலோ கிராமுக்கு 50 ரூபா விற்பனை பொருட்களுக்கான விசேட வரி விதிப்பதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

Share:

Related Articles