NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உறுமய வேலைத்திட்டம் – 249 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்க தீர்மானம்

கடந்த அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உறுமய காணி உரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அமைச்சர் விஜித்த ஹேரத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, அதன் ஒரு கட்டமாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான முழுமைப்படுத்தப்பட்ட 249 வீடுகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.

இதன்போது அரசியல் தலையீடு இருக்காது எனவும், அதிகாரிகளினால் குறித்த வீடுகள் கையளிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles