உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கவுள்ள நிலையில், 10 அணிகள் மோதும் தகுதிச் சுற்று அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.
ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள இந்த போட்டியில் 10 அணிகள் 2 குழுக்களாக பிரிக்கப்படுகின்றன.
குரூப் ஏ பிரிவில் ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், நெதர்லாந்து, நேபாளம் மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
குரூப் பியில் இலங்கை, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
தகுதிப் போட்டிகள் ஜூன் 18 ஆம் திகதி தொடங்குகின்றன. இறுதிப் போட்டி ஜூலை 9 ஆம் திகதி நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.