NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கோப்பை கால்பந்து – கோபமாக வெளியேறிய மெஸ்ஸி!

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

தென் அமெரிக்கா நாடுகளுக்கான தகுதிச் சுற்று ஒன்றில் இன்று தொடங்கியது.

தென் அமெரிக்காவின் தலைசிறந்த இரண்டு அணிகள் மோதியதால் பிரேசில் மற்றும் அர்ஜென்டினாவை சேர்ந்த ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்து இருந்தனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்ட வேளையில், திடீரென கேலரில் இருநாட்டு ரசிகர்களும் மோதிக் கொண்டனர். அப்போது மோதலை முடிவுக்கு கொண்டு வர பொலிஸார், ஆர்ஜென்டினா இரசிகர்கள் மீது தடியடி நடத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த மெஸ்சி, தனது சக வீரர்களுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

நடுவரிடம் நாங்கள் விளையாட தயாராக இல்லை. வெளியேறுகிறோம் எனக் கூறி சென்றுவிட்டார். பின்னர், மோதல் முடிவுக்கு வந்தது.

இதனால், சுமார் அரைமணி நேரம் போட்டி நடைபெறவில்லை. பின்னர் மெஸ்சி விளையாட சம்மதம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அரைமணி நேரம் தாமதமாக போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் அர்ஜென்டினா 1 – 0 என வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் நிக்கோலஸ் ஒடாமெண்டி 63ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார்.

இதற்கு முன் கோபா அமெரிக்க இறுதிப் போட்டியில் பிரேசிலை 1-0 என அர்ஜென்டினா வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles