NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக அழகி போட்டி: மகுடம் சூடினார் செக் குடியரசின் கிறிஸ்டினா!

செக் குடியரசைச் சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா 2024 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

71வது உலக அழகி போட்டியில் 115 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இறுதிச்சுற்றுப் போட்டி மிக பிரமாண்ட முறையில் மும்பையில் நேற்று இடம்பெற்றது.

28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலக அழகி போட்டி ஒன்று இந்தியாவில் நடத்தப்பட்டுள்ளமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது.

14 பேர் தகுதிப்பெற்ற இறுதிப்போட்டியில், செக் குடியரசைச் சேர்ந்த 23 வயதான கிறிஸ்டினா பிஸ்கோவா (Krystyna Pyszkova) 2024 ஆம் ஆண்டிற்கான 71 ஆவது உலக அழகி மகுடத்தினை சூட்டிக்கொண்டார்.

2022 ஆம் ஆண்டுபட்டம் வென்ற போலந்து நாட்டை சேர்ந்த கரோலினா உலக அழகிக்குரிய மகுடத்தைச் சூட்டினார்.

லெபனான் நாட்டைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடத்தினையும், டிரினிடாட் மற்றும் டொபாகோ தீவு மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆர்கே ஆபிரகாம்ஸ் மூன்றாவது இடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட கிறிஸ்டினா பிஸ்கோவா சட்டம் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாக செக் குடியரசு 2006 ஆம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்றிருந்தது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles