(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உலக கோப்பை செஸ் தொடர் அஸர்பைஜானில் உள்ள பாகு என்ற நகரில் நடைபெற்று வருகிறது.
இதன் அரை இறுதியில் இந்திய கிராண்ட் மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பேபியானோ கருணாவுடன் மோதினார்.
நேற்று முன்தினம் நடந்த முதல் ஆட்டத்தில் கறுப்பு நிற காய்களுடன் விளையாடிய பிரக்ஞானந்தா 78ஆவது காய் நகர்த்தலில் டிரா செய்தார்.
அரை இறுதி சுற்றின் 2ஆவது ஆட்டம் நேற்று (21) நடந்தது. இதில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா ஆடினார். 47ஆவது காய் நகர்த்துக்கு பிறகு இந்த ஆட்டமும் ‘டிரா’ ஆனது.
இதைத் தொடர்ந்து டை-பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டுஇ இதில் வெற்று பெறுவோர் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை உருவானது.
அதன்படி டை-பிரேக்கர் சுற்றில் பிரக்ஞானந்தாஇ உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான ஃபேபியானோ கருணாவை எதிர்கொண்டு விளையாடினார். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து விளையாடிய கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தினார்.
இதன் மூலம் பிரக்ஞானந்தா இறுதி போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இறுதிப் போட்டியில் பிரக்ஞானந்தா மேக்னஸ் கார்ல்சனுடன் மோத இருக்கிறார்.