மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்துள்ளமையால் உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை இன்று குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரண்ட் கச்சா எண்ணெய் பரல் ஒன்றின் விலை 76.77 டொலராகவும், வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.39 டொலராகவும் குறைந்துள்ளது.
பிரென்ட் பீப்பாய் ஒன்றின் விலை கடந்த வெள்ளிக்கிழமை சுமார் 3% சரிந்தது, இது ஜனவரி மாதத்திற்குப் பின் மிகவும் குறைவான நிலையாகும்.
குறிப்பாக மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதல் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் தடைப்படுமென சந்தையில் ஒருவித பதட்டம் நிலவும் நிலையில் விலை குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.