NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலக சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்தியாவின் சீனி ஏற்றுமதி தடை!

இந்தியா, அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்ததைத் தொடர்ந்து சீனி ஏற்றுமதிக்கு அடுத்த மாதம் முதல் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச பொருளாதார நிலைமைகளை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.சீனி உற்பத்தி செய்யும் மாநிலங்களில் நிலவும் வறட்சி காரணமாக கரும்பு விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.இந்தியாவின் சீனி உற்பத்தி துறையில், 50 வீதத்திற்கு அதிகளவில் கரும்பு வளர்ப்பில் ஈடுபடும் மகாராஷ்ட்டிரா மற்றும் கர்நாடகாவில் பருவமழை குறைவடைந்துள்ளதன் காரணமாக பயிர்ச்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீரற்ற காலநிலை 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு பருவ காலத்தில் சர்க்கரை உற்பத்தியைக் குறைக்கும் எனவும் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பருவத்திற்கான நடவுகளைக் குறைக்கும் எனவும் தொழில்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டு பருவ காலத்தில் இந்தியாவின் சீனி உற்பத்தி 3.3 வீதம் குறைவடைந்து 31.7 மில்லியன் தொன்களாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பின்னணியில், இந்தியா சீனி ஏற்றுமதியை தடை செய்யும் நிலையில், உலக சந்தையில் நியூயோர்க் மற்றும் லண்டன் ஆகியன சீனி விலையை அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலைமையானது உலக சந்தையில் கூடுதல் பணவீக்கத்தை ஏற்படுத்துமென்ற கவலையை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், உள்நாட்டு தேவையினை பூர்த்தி செய்வதும், மேலதிக கரும்பில் இருந்து எத்தனோலை உற்பத்தி செய்வதுமே முதன்மை நோக்கமாகுமென இந்தியா தெரிவித்துள்ளது.இதன்படி வரும் பருவத்தில் ஏற்றுமதி செய்வதற்கான சீனி தம்மிடம் இருக்காது எனவும் குறிப்பிட்டுள்ளது.முந்தைய பருவத்தில் 11.1 மில்லியன் மெட்ரிக் தொன் சீனியை விற்பனை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டதுடன், தபோதைய சூழ்நிலையில் 6.1 மில்லியன் மெட்ரிக் தொன் சீனியை ஏற்றுமதியை செய்வதற்கு இந்திய அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.இதன்படி, குறித்த தொகையினை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை மாத்திரமே ஏற்றுமதி செய்ய முடியுமென குறிப்பிடப்பட்டுள்ளது.இதனிடையே, தாய்லாந்து போன்ற ஏனைய நாடுகளினால் குறைக்கப்பட்ட சீனி உற்பத்தி காரணமாக ஏற்கனவே சவால்களையே எதிர்கொண்டுள்ள உலக சந்தைகளில் இந்தியாவின் நடவடிக்கை மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் நிபுணர்கள் எடுத்துக்காட்டுகின்றனர்.இதன்படி, இந்தியாவிடமிருந்து சீனியை இறக்குமதி செய்யும் சுவீடன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் தற்போதே வெளிப்படத் தொடங்கியுள்ளது.குறித்த நாடுகளில் நாளுக்கு நாள் சீனியின் விலை அதிகரித்துச் செல்வதனை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலையானது இலங்கை, சீனா, சவூதி அரேபியா, லிபியா, ஆப்கானிஸ்தான், சூடான், சோமாலியா, ஈராக், ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளும் இந்தியாவின் சீனி இறக்குமதி தடையால் எதிர்காலத்தில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.ஆக, எதிர்காலத்தில் இலங்கையும் இந்த சவாலை எதிர்கொள்ள நேருமென எதிர்பார்க்கப்படுகிறது.

Share:

Related Articles