ICC இன் ஒருநாள் உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுத் தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகள் இடையே நடைபெற்ற போட்டியில் இலங்கை 133 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவு செய்திருக்கின்றது.
மேலும் இந்த வெற்றியோடு உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பதிவு செய்துள்ள இலங்கை உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் ”சுபர் 6” சுற்றுக்கு தெரிவாகுவதோடு, இலங்கையுடன் இப்போட்டியில் தோல்வியினைத் தழுவிய அயர்லாந்து உலகக் கிண்ண தகுதிகாண் தொடரிலிருந்து மூன்று தொடர் தோல்விகளுடன் வெளியேறுகின்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்த வனிந்து ஹஸரங்க ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக 5 விக்கெட்டுக்களை கைப்பற்றியதோடு, ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் 5 விக்கெட்டுக்களை கைப்பற்றிய முதல் சுழல்பந்துவீச்சாளர் என்கிற உலக சாதனையையும் நிலை நாட்டியிருந்தார். இதேநேரம் மகீஷ் தீக்ஷனவும் 2 விக்கெட்டுக்களுடன் இலங்கைத் தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
அயர்லாந்தின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக கேர்டிஸ் கேம்பர் 39 ஓட்டங்களை பெற்றிருந்தும் அவரது ஆட்டம் வீணாகியது. போட்டியின் ஆட்டநாயகனாக இலங்கை அணிக்காக இப்போட்டியில் சதம் விளாசிய திமுத் கருணாரட்ன தெரிவாகினார். இலங்கை கிரிக்கெட் அணி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் அடுத்ததாக ஸ்கொட்லாந்துடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (27) மோதுகின்றது.