(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஹங்கேரியில் இம்மாதம் நடைபெறவுள்ள உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மேலும் 3 வீரர்கள் தகுதி பெற்றுக்கொண்டுள்ளதாக இலங்கை மெய்வல்லுநர் சங்கம் அறிவித்துள்ளது.
இதன்படி, கயந்திகா அபேரத்ன, நதீஷா தில்ஹானி லேகம்கே மற்றும் அருண தர்ஷன ஆகிய மூவரும் இம்முறை உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடருக்கு தகுதி பெற்றுள்ளனர்.
உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் தொடருக்கான அடைவ மட்டத்தைப் பூர்த்தி செய்து தரவரிசைப் பட்டியலில் முன்னிலையில் இருந்த வீரர்கள் பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகியதால், இந்த மூவருக்கும் அவர்களின் போட்டி நிகழ்ச்சிகளுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் வாய்ப்பு கிடைத்துள்ளது.