NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உள்ளுர் சந்தையில் வெற்றிலை பாக்கின் விலை அதிகரிப்பு!

உள்ளுர் சந்தையில் வெற்றிலையின் விலை அதிகரித்துள்ளதாக ஹட்டன் பிரதேசத்தின் வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்களில், வெற்றிலை பாக்குக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக, மொத்த விலையில் இருந்து 20 ரூபாய்க்கு அதிகமாக வெற்றிலை பாக்கு விற்கப்படுகிறது. அத்துடன், ஒரு பாக்கு 10 முதல் 18 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

எனினும், வெற்றிலையின் விலை அதிகரிப்பால் ஒரு வெற்றிலை 60 முதல் 80 ரூபாய் வரையில் விற்கப்படுவதாகவும் இதனால் வியாபாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் வெற்றிலை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

பெருந்தோட்ட மக்கள் வெற்றிலையை அதிகம் உண்ணும் பழக்கம் கொண்டுள்ளதால், வெற்றிலையின் விலை அதிகரிப்பால் அந்த மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles