(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு நீதிமன்றினால் குற்றவாளிகளாக அடையாளம் காணப்படுபவர்களை தலையில் சுட வேண்டும் என தாம் முன்மொழிவதாக மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாலக பண்டார கோட்டேகொட தெரிவித்தார்.
குற்றவாளிகளுக்கு ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் கால அவகாசம் வழங்கிய பின்னர், இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கும் அதே தண்டனை வழங்கப்பட வேண்டுமென நாலக பண்டார எம்.பி மேலும் குறிப்பிட்டார்.
ஊழல் ஒழிப்பு சட்ட மூலம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற போது போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.