NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்றக் குழு கூட்டம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

நாட்டின் பல்வேறு துறைகளில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வுகளை வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் பாராளுமன்றக் குழுவொன்று இன்று (13) ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்கேற்புடன் நடைபெறவுள்ள இந்தக் குழுவின் ஊடாக பல்வேறு துறைகளின் பிரச்சினைகள் கலந்துரையாடப்பட உள்ளன.

பாராளுமன்றத்தின் குழு அறை எண் 8 இல் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் இந்தக் குழு கூடியுள்ள நிலையில், அரசாங்க கதிரியக்க தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம், அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம், சிவில் உரிமைகளுக்கான மருத்துவ நிபுணர்கள் சங்கம், சுகாதார நிபுணர்கள் நிறுவனம் போன்றவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவும் இதில் கலந்துகொண்டுள்ளது.

Share:

Related Articles