தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் வளிமண்டலத்தின் தாழ்வான பகுதியில் காற்றழுத்தம் உருவாகியுள்ளது.
அடுத்த சில நாட்களில், இந்த அமைப்பு படிப்படியாக குறைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி பின்னர் புயலாக மாறும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
இந்நிலையை தொடர்ந்து, வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு மீனவ மற்றும் கடல்சார் சமூகத்திடம் கோரப்பட்டுள்ளது.