NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

எலிமினேட்டர் சுற்று போட்டியில் RR vs RCB!

IPL 2024 தொடரின் எலிமினேட்டர் சுற்று போட்டியில் 2ஆவது முறையாக Rajastan Royals மற்றும் Royal Challengers Bangalore அணிகள் மோதுகின்றன.

IPL 2024 கிரிக்கெட் தொடரின் Playoff சுற்று போட்டிகள் நேற்று தொடங்கியது.

இதில், முதல் தகுதிச் சுற்று போட்டி நேற்று நடைபெற்றதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் KKR 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு சென்றது.

முதல் தகுதிச் சுற்று போட்டியைத் தொடர்ந்து இன்று 2ஆவது தகுதிச் சுற்று போட்டி நடைபெறுகிறது. இதில், RR மற்றும் RCB அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய எலிமினேட்டர் போட்டியில் RCB வெற்றி பெற்றிருக்கிறது.

இதற்கு முன்னதாக RR 3 முறை எலிமினேட்டர் சுற்று போட்டியில் விளையாடியுள்ளது. இதில் ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. மேலும், RR ஒரே ஒரு முறை மட்டுமே சம்பியன் பட்டம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles