இலங்கை கடற்படை சார்பில் ஜனவரி 24 மற்றும் 27ஆம் திகதிகளில் துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடைபெறுவதால், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் என இந்திய மீன்வளத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இலங்கையின் வடக்கு பிராந்திய கடற்படையினர், காங்கேசன்துறை மற்றும் பருத்தித்துறை கடற்பகுதியில் கடற்படை ரோந்து படகுகள் மூலம் ஜனவரி 24 மற்றும் 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர்.
ஆகையால், அந்தப் பகுதிகளில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க வருகைத்தர வேண்டாம் என இலங்கை கடற்படை சார்பாக யாழ்ப்பாணம் மீன்வளத்துறை மூலம் இந்திய அனைத்து மீனவ சங்கங்களுக்கும் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாக் ஜலசந்தி கடற்பகுதியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் சர்வதேச எல்லை தாண்டி சென்று மீன்பிடிக்க வேண்டாம் எனவும் என இந்திய மீன்வளத் துறை சார்பில் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.