தேர்தலை ஒத்திவைப்பதற்கு இணங்கும் அனைத்து அரசியல் கட்சிகளையும் அழித்துவிட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ஒரு கதையும் அதன் செயலாளர் இன்னொரு கதையும் சொல்வார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்
கொழும்பில் இன்று இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஒரு கட்சி என்ற ரீதியில் தேர்தலை ஒத்திவைப்பதை எதிர்ப்பதாக தெரிவித்த நாமல் ராஜபக்ஷ, தேர்தலை ஒத்திவைத்த கட்சிகளும் அரசாங்கங்களும் வரலாற்றில் இருந்து அழிக்கப்பட்டுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
அத்துடன் சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் தேர்தலை இரண்டு வருடங்கள் ஒத்திவைத்ததன் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாடாளுமன்றத்தில் 8 ஆசனங்களாக வீழ்ந்ததாகவும், தேர்தலை ஒத்திவைத்த ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி ஒரு ஆசனத்திற்கு வீழ்ச்சியடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்
மேலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் எவ்வாறாயினும், வேட்பாளர் யார் என்பது தற்போதைக்கு வெளியிடப்படாது எனவும், நேரம் வரும்போது வேட்பாளர் அறிவிக்கப்படும் எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய அரசாங்கத்தின் பிரதான பங்குதாரராக இருப்பதால், ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் தொடர்ந்து கலந்துரையாடி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.