(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 50,000ஆக அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் ஷக்ய நாணயக்கார தெரிவித்துள்ளார்,
கடந்த ஆண்டின் இறுதியில் போதைபொருள் பாவனையாளர்களுக்கான புனர்வாழ்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட நபர்களில் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், அண்மை காலமாகவே போதை பொருட்களின் பாவனை இலங்கையில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக பாடசாலை மாணவர்களை குறிவைத்தே பல்வேறு போதைப்பொருட்கள் விற்பனையாகின்றன.
இக்குற்றவியல் செயற்பாடானது மாணவர்களின் எதிர்காலத்தையும் நாட்டின் வளர்ச்சியையும் பாதித்து பின்னடைவை ஏற்படுத்துகிறது. எனவே, இவ்வாறான சூழ்நிலையில் போதைப்பொருட்களுக்கு அடிமையான நபர்களை அவற்றிலிருந்து மீட்டெடுக்க அரசாங்கத்தால் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி பல்வேறு இடங்களிலும் விழிப்புணர்வு செயற்பாடுகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனையில் இருந்து விடுபட நினைப்பவர்கள் தேசிய புனர்வாழ்வு பணியகத்தை தொடர்பு கொள்ளலாம்.
தேசிய புனர்வாழ்வு பணியகத்தை தொடர்புகொள்ள விரும்புவோருக்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Bureau of Rehabilitation:
No: 462/2,Kaduwela Road,
Ganahena,
Battaramulla,
Sri Lanka.
Tel: +94 112883891
Tel: +94 112577457
Fax: +94 112883737
Fax: +94 112883899
Email: [email protected]
Facebook: www.facebook.com/bcgr.gov.lk
Youtube : click here
Tik Tok : click here
Instagram : click here