NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒடிசா விபத்து – இறந்தவர்களின் உடல்களுக்குள் சிக்குண்டிருந்த தம்பியை காப்பாற்றிய அண்ணன்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இந்தியா – ஒடிசா மாநிலம் பாலசோரில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் அண்ணனால் காப்பற்ற தம்பி பற்றி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

விபத்தில் உயிரிழந்த 7 பேரின் உடல்களின் கீழ் உயிருடன் சிக்குண்டிருந்த தம்பியை பத்தே வயதான அண்ணண் காப்பாற்றியுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதம், கடந்த வெள்ளிக்கிழமை இரவு சரக்கு புகையிரதம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஒடிசா மாநிலம் போக்ராய் கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினரும் சிக்கியுள்ளனர்.

அந்த குடும்பத்தில் 10 வயது சிறுவன் தனது தாய், தந்தை, அண்ணனுடன் குறித்த புகையிரதத்தில் கடந்த வெள்ளிக்கிழமை பயணித்தான். பத்ராக் பகுதியில் உள்ள மாமா வீட்டுக்கு அவர்கள் சென்று கொண்டிருந்த போதே, பாலசோர் அருகே புகையிரதம் விபத்தில் சிக்கியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் கூறியபோது, பத்ராக் பகுதியில் உள்ள எங்கள் மாமா வீட்டுக்கு புகையிரதத்தில் சென்றோம். அங்கிருந்து புரி செல்ல திட்டமிட்டிருந்தோம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் புகையிரதத்தில் தாய், தந்தை அண்ணனுடன் சென்றேன். பாலசோர் புகையிரத நிலையம் தாண்டியதும் திடீரென புகையிரத் பெட்டி பயங்கர சத்தத்துடன் குலுங்கியது.

அதன்பிறகு நான் மயக்கம் அடைந்துவிட்டேன். என்ன நடந்தது என்று தெரியவில்லை. கண் திறந்து பார்த்தபோது, பயங்கர வலியில் துடித்தேன். என் மீது இறந்தவர்களின் உடல்கள் கிடந்தன. எனது அண்ணன் என்னை காப்பாற்றினான் எனக்கூறினான். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles