NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒடிஸாவில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகிய AI லிசா !

இந்தியாவில் ஒடிஸாவில் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) செய்தி வாசிப்பாளரை ஒடிஸா டிவி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த செய்தி வாசிப்பாளருக்கு லிசா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளில் பேசும் திறன் உண்டு எனவும் தற்போது ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதுகுறித்து அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் லிடிஷா மங்கத் பாண்டா கூறுகையில்,

ஒடியா மொழியில் லிசாவுக்கு பயிற்சி அளித்தது மிகப் பெரிய கடினமான பணியாகும். எப்படியோ அதில் நாங்கள் சாதித்து விட்டோம். எனினும் அதில் இன்னும் நாங்கள் சில பணிகளை ஆற்றி வருகிறோம். அவர் மற்றவர்களுடன் பேசும் அளவுக்கு அடுத்த லெவலுக்கு செல்ல பயிற்சி கொடுப்போம் என நம்புகிறோம்‘ எனவும் தெரிவித்துள்ளார்.

சீனாவில் செய்தி நிறுவனம் ஒன்றும் ஏஐ நியூஸ் ஆங்கரை இதற்கு முன்னர்அறிமுகப்படுத்தியிருந்தமைக் குறிப்பிடத்தக்து.

Share:

Related Articles