NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி மட்டுமே நிகழ்த்திய சாதனை!

16ஆவது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கொழும்பில் உள்ள பிரேமதாஸ விளையாட்டரங்கில் நடந்து வருகிறது.

இதில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்கும்.

இந்நிலையில் சூப்பர்4 சுற்றின் 4ஆவது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சம்பியன் இலங்கையும் நேற்று பலப்பரீட்சை நடத்தின. நாணயசுழங்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது.

சுழலுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு All-out ஆனது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 5 விக்கெட், சரித் அசாலங்க 4 விக்கெட், மகேஷ் தீக்ஷன ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இதையடுத்து 214 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இலங்கை அணியை 41.3 ஓவரில் 172 ரன்களுக்கு இந்திய பந்து வீச்சாளர்கள் All-out செய்தனர். இதன் மூலம் 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

இந்நிலையில் இந்த ஆட்டத்தில் இந்திய அணியை ஆல்-அவுட் செய்ததன் மூலம் இலங்கை அணி ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

HIGHLIGHTS

எதிரணியை தொடர்ச்சியாக 14 முறை All-out செய்த அணி என்ற சாதனையை இலங்கை படைத்துள்ளது.

5 விக்கெட்டுக்களை பதம் பார்த்த இளம் பந்து வீச்சாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரானார் துனித் வெல்லாலகே.


இந்திய அணியின் 10 விக்கெட்டுக்களையும் சுழல் பந்து வீச்சாளர்கள் கைப்பற்றிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்திய அணியின் முன்வரிசை வீரர்கள் நால்வரையும் ஆட்டமிழக்க செய்த சுழல் பந்து வீச்சாளர் துனித் வெல்லாலகே ஆவார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles