ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் அமுலாகும் வகையில் நீர் கட்டணங்கள் திருத்தப்பட்டு வர்த்தாமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் ஜீவன் தொண்டமானினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, நீர் பாவனையாளர்களின் நீர் பாவனைக்கு அமைய 30 வீதம் முதல் 50 வீதம் வரை பல்வேறு பிரிவுகளில் நீர் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்தக் கட்டண அதிகரிப்பினால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.