NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வுபெறும் முடிவை மாற்றிய தமிம் இக்பால்!

பங்களாதேஷ் அணியின் தொடக்க ஆட்டக்காரரான தமிம் இக்பால் நேற்று முன்தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

எனவே, ஓய்வு பெறும் முடிவை திரும்ப பெறுவதாக அவர் அறிவித்துள்ளார். இது பங்களாதேஷ் கிரிக்கெட் இரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து தமிம் இக்பாலை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா சந்தித்து பேசிய பிறகு தனது ஓய்வு முடிவை திரும்ப பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார்.

தற்போது இந்த தகவல் பங்களாதேஷ் இரசிகர்களிலேயே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பங்களாதேஷ் வீரர் தமிழ் இக்பால் தனது ஓய்வு பெறும் முடிவை திரும்பப் பெற்ற தால் இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கிண்ணத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிம் இக்பால் பங்களாதேஷ் அணிக்காக ஒருநாள் போட்டிகளில் 14 சதங்கள் உட்பட 8313 ஓட்டங்களை எடுத்துள்ளார். மேலும், 70 டெஸ்ட் போட்டிகளில் 10 சதங்களுடன் 5134 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles