ஓய்வூதியத் திட்டங்களை வலுப்படுத்த அரசாங்கத்தின் திட்டம் என்ன என சஜித் பிரேமதாச வினவியிருந்தார். நமது நாட்டில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலனுக்கான திட்டமாக சமூக பாதுகாப்புப் பயன் ஓய்வூதிய முறை இருந்தது. இதன் கீழ், விவசாயிகளின் ஓய்வூதியம் மற்றும் மீனவர்களின் ஓய்வூதியம் இரண்டும் இந்நாட்டில் உள்ள இலட்சக்கணக்கான விவசாயிகளினதும் மீனவர்களினதும் பெரும் பிரச்சினையாக மாறியுள்ளன. இது குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் கேள்வி எழுப்பியிருந்தேன். இவ்விரு ஓய்வூதியத் திட்டத்தையும் வலுப்படுத்தி சமூகப் பாதுகாப்பு நலத்திட்டத்தை பலப்படுத்த அரசாங்கம் வகுத்துள்ள திட்டம் யாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று கேள்வி எழுப்பினார்.இது தொடர்பில் தாம் இதற்கு முன்னர் பல தடவைகள் கேள்வி எழுப்பிய போதிலும் அரசாங்கத்திடம் இருந்து சாதகமான பதில் கிடைக்கவில்லை. எனவே இதற்கு முறையான வேலைத்திட்டம் ஒன்று தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.