NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓய்வை அறிவித்தார் ஜடேஜா!

சா்வதேச T 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக, இந்திய ஆல்-ரவுண்டா் ரவீந்திர ஜடேஜா நேற்று (30) அறிவித்தாா்.

T 20உலகக் கிண்ணத்தை வென்ற நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சா்மா, பேட்டா் விராட் கோலி ஆகியோா், அந்த ஃபாா்மட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக சனிக்கிழமை இரவு அறிவித்த நிலையில், தற்போது ஜடேஜாவும் அதே முடிவை அறிவித்தாா். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அவா் தொடா்ந்து விளையாடுகிறாா்.

தனது முடிவு குறித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மனம் முழுக்க நன்றியுடன், சா்வதேசT 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன். நாட்டுக்காக எப்போதுமே எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறேன். இனிவரும் காலங்களில் இதர ஃபாா்மட்டுகளிலும் அத்தகைய பங்களிப்பை வழங்குவேன்.

T 20 உலகக் கிண்ணத்தை வெல்வதென்பது, எனது T 20 கேரியரின் உச்சபட்ச கனவாகும். அது நிஜமாகியிருக்கிறது. இந்த நினைவுகளுக்காகவும், ஆதரவுக்காகவும் நன்றி. ஜெய்ஹிந்த்’ என்று ஜடேஜா கூறியுள்ளாா்.

2009-இல் இலங்கைக்கு எதிரான தொடா் மூலம் சா்வதேச T 20 கிரிக்கெட்டில் அறிமுகமான ஜடேஜா, மொத்தம் 74 டி20 ஆட்டங்களில் விளையாடியிருக்கிறாா். அதில் 515 ரன்கள் அடித்திருக்கும் அவா், அதிகபட்சமாக 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறாா். பந்துவீச்சில் 54 விக்கெட்டுகள் எடுத்துள்ளாா்.

ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவேன். T 20 உலகக் கிண்ணத்தை வெல்வது ஒரு கனவு. அது நனவாகிவிட்டது. இது எனதுT 20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம். என்னுடைய நினைவுகளுக்கும், வாழ்த்துகளுக்கும், உங்களின் அசைக்க முடியாத ஆதரவுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்..!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Share:

Related Articles