NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஓராண்டுக்கு இடையில் நாட்டை விட்டு 700 தாதியர்கள் வெளியேற்றம்!

2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 2023ஆம் ஆண்டு ஜனவரிக்கு இடையில் சுமார் 700 தாதிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக சுகாதார திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவர்களில் 550 தாதியர்கள் சுகாதார அமைச்சின் அங்கீகாரத்துடன் விடுமுறை எடுத்து, 5 வருட காலத்திற்கு மேலதிக கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளனர். தற்போதைய தரவு அறிக்கைகளின் படி சுமார் 150 தாதியர்கள் வெளிநாடு சென்றுள்ளனர்.

இது தொடர்பான விசாரணையில், சுகாதார அமைச்சின் பணிப்பாளர் (தாதியர் கட்டுப்பாடு) சமிக்க கமகே கருத்து தெரிவிக்கையில், தாதியர் சேவையில் தற்போது சுமார் 2400 வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், இந்த வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Share:

Related Articles