NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கச்சத்தீவு திருவிழா இன்று ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் தேவாயலத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பமாகின்றது.

இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த திருவிழாவுக்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.சிவபாலசுந்தரம் தெரிவித்தார்.

அத்துடன் இன்றைய தினம் விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, இன்றைய தினம் ஆரம்பமாகும் கச்சதீவு திருவிழாவில் பங்கேற்க போவதில்லை என தமிழக தரப்பினர் அறிவித்துள்ளனர்.

இலங்கையில் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமையை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் தமிழக மீனவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles