(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் மருதங்கேணியில் பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாருடன் அவதூறான வார்த்தைகளை பயன்படுத்தியமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்ட போதும் அவர் முன்னிலையாகத காரணத்தினாலே அவர் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.