NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடந்த ஆண்டில் மாத்திரம் 69 வீதமான புகையிரதங்கள் தாமதமாக வருகை!

கடந்த ஆண்டில் மாத்திரம் 69 வீதமான புகையிரதங்கள் தாமதமாக வருகைத் தந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

அந்த எண்ணிக்கை 69,594 எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சரியான நேரத்தில் வருகைதந்துள்ள புகையிரதங்களின் எண்ணிக்கை 36,053 அதாவது 34 வீதமானவை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் பயணிக்க திட்டமிடப்பட்ட புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 113,759 ஆகும். எனினும், பயணிக்கப்பட்ட புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 105,048 ஆகும்.

இந்நிலையில், 15,069 புகையிரத சேவைகள் 6 -10 நிமிடங்கள் வரையில் தாமதிக்கப்பட்டுள்ளன.

11-30 நிமிடங்கள் வரையில் 33,069 புகையிரத சேவைகள் தாமதிக்கப்பட்டுள்ளன.

31-60 நிமிடங்கள் வரையில் தாமதிக்கப்பட்டுள்ள புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 14,431 ஆகும்.

ஒரு மணித்தியாலத்தை விட அதிக நேரம் தாமதமடைந்த புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 7,022 எனவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

மேலும், கடந்த 2020ஆம் ஆண்டில் திட்டமிட்ட புகையிரத சேவைகளின் எண்ணிக்கை 112,483 எனினும், 105,607 புகையிரத சேவைகள் மாத்திரமே இணைக்கப்பட்டுள்ளன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles