NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடனை மீள செலுத்த முடியால் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் – ஆறுகால்மடம் பகுதியில் வட்டிக்கு கடன் பெற்ற பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமையினால்இ கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.

இந்நிலையில் நேற்று தூக்கிட்டு தற்கொவை செய்துகொண்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Share:

Related Articles