கடற்படை வீரரிடமிருந்து இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்களை இருவர் திருடிச் சென்றுள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
தங்க சங்கிலி, கையடக்கத் தொலைபேசி மற்றும் 2000 ரூபா பணமும் திருடப்பட்டுள்ளதாக குறித்த கடற்படை வீரர் முறைப்பாடு செய்துள்ளார்.
அநுராதபுரம் புகையிரத நிலையத்திற்கு அருகில் காத்திருந்த கடற்படை வீரருக்கு அவ்வழியாக சென்ற இருவர் மதுபானத்தை குடிக்க கொடுத்த நிலையில் குறித்த நபர் மதுபானத்தை குடித்து விட்டு தூங்கிய போது அவரிடமிருந்து நகை மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.